Friday 25 May 2012

ஐபிஎல் நாடகங்கள்

எழுதியவர்: சங்கர கண்ணன்


நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் போட்டியைப் பார்த்த பின்னும் இன்னமும் “இது ஃபிக்ஸிங் இல்லை, ஃபிக்ஸிங் இல்லை” என்று கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஐந்து கேள்விகள். பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

1) டாஸ் ஜெயித்த சேவாக், இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங்’கிற்கு ஒத்துழைக்காமல் ஸ்லோ ஆகிப்போகும் ஒரு பிட்ச்’சில் ஏன் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்?

2) இந்த ஐபிஎல்-5 தொடரில் அதிகபட்ச விக்கெட் எடுத்தவரும், டெல்லி டேர்டெவில் அணியின் அதிமுக்கிய வேகப்பந்து வீச்சாளருமான மார்னி மார்க்கெல் ஏன் பெவிலியனில் உட்கார வைக்கப்பட்டார்?

3) சேவாக் என்பவர் ஒருநாள், பலநாள், 20 ஓவர், இந்தியாவிற்கு, டெல்லி டேர்டெவிலுக்கு என யாருக்கு எங்கே ஆடினாலும் இன்னிங்க்ஸை ஓபன் செய்து அட்டாக் செய்பவர், நேற்று முதல் டவுனில் வந்ததன் காரணம்தான் என்ன?

4) இந்தத் தொடரின் ஆரம்பம் தொட்டு இரட்டை இலக்க ஸ்கோரை எட்டவே மூச்சுமுட்டிய முரளி விஜய் நேற்று ருத்ரதாண்டவம் ஆடமுடிந்ததன் பின்னணி என்ன?

5) இதுவ்ரை யாரும் அறிந்திராத அந்த ஸ்பின்னர் குப்தா நேற்றைய அதிமுக்கியப் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டதன் ரகசியம் என்ன? அவருக்கும் முதல் ஓவர் தரப்பட்டு அவர் பந்துகள் சாத்தோ சாத்தென்று சாத்தப்பட்டதன் காரணம்தான் என்ன?

அட சீனு மாமா விசிறிகளே! கொஞ்சம் சொல்லுங்களேன்!

You may like this as well...

Related Posts Plugin for WordPress, Blogger...