Wednesday 28 January 2015

வடக்குப்பட்டி ராமசாமிட்டருந்து பணம் வந்துரும்




மேலே கொடுத்திருக்கும் என் ட்வீட் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியின் போது நான் போட்டது.   நிஜமாகவே இந்திய அணியின் நிலைமை அந்தக் கடனைக் கேட்கப் போகும் கவுண்டமணியின் நிலைக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு இந்தியனின் கனவும் இந்தியா இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுவே!

இங்கே கீழே இருக்கும் கருத்து நண்பர் சேதுராமன் சொல்வது.



ஸ்மித்தும், டிவில்லர்ஸும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நியூசி அணியும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பாகிஸ்தான் அணியின் சமீபத்தைய எழுச்சி யோசிக்க வைக்கிறது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் களமிறங்குகிறது. இங்கிலாந்து இந்த முத்தரப்புத் தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும்  நன்றாகவே ஆடியுள்ளது; ஆஸ்திரேலியாவுடன் தோற்றுப்போன இரண்டு போட்டிகளையும் சேர்த்தே நான் சொல்கிறேன். மே.இந்திய அணியை உதாசீனப்படுத்துவதற்கில்லை. இலங்கை அணி கடந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் ஃபேவரிட் அணியாக ஊகிக்கப்படாத அணியாக இருந்தும் இறுதிவரை வந்த அணி, ஆக, மிச்சம் இருப்பது ஜிம்பாப்வேயும் இதர உதிரி அணிகளும் மட்டுமே.

மேலே நான் குறிப்பிட்ட ஏழு அணிகளையும் கடந்துதான் இந்தியா கோப்பையை இந்தியாவிற்குக் கொண்டு வர முடியும்.

இங்கே இந்தியாவின் பலத்தைப் பார்ப்போம்.

இந்தியா ஒருநாள் போட்டிகளில் ஜித்து அணிதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உள்ளூரில் ஆஸ்திரேலியாவை உதைத்தது முதல் வெளியூரில் இங்கிலாந்தை துவைத்தது வரை சென்ற ஆண்டின் வெற்றிப் பட்டியல்களில் நிறைய சொல்லலாம். இங்கே கோஹ்லி தலைமையில் மே.இந்திய தீவுகளையும், இலங்கையையும் புரட்டி எடுத்ததையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், எப்போதும் current form of the team என்பதுதான் கருத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நம் அணி டெண்ட் அடித்துத் தங்கியுள்ளது. ஆம், தங்கி மட்டுமே உள்ளதாகத்தான் நம் ரசிகர்களுக்குத் தெரிகிறது. இன்னமும் ஒரு வெற்றி எண்ணிக்கையையும் நான் அங்கே துவக்கவில்லை. டெஸ்ட் மேட்ச் - இரண்டு தோல்வி, இரண்டு ட்ரா. ஒருநாள்: இதுவரை ஆடினதில் இரண்டு தோல்வி, ஒன்றில் ரிசல்ட் இல்லை. இதுவே நிலைமை. 

ஷிகார் தவான்: பதினைந்தில் ஒன்றான இவருக்கு உலகக் கோப்பை போட்டிகளில் பதினொன்றில் ஒருவராக உள்ளே நுழைய வாய்ப்பு தரப்பட்டால் அது அவருக்கே அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஜிங்க்ஸ்: இவர் ட்ராக் ரெகார்டை வைத்துப் பார்த்தால் ஒரு மிதமான நம்பிக்கை தருகிறார். ஆனால் ட்ராக் ரெகார்ட் ரொம்ப நீளமானது அல்ல. ஒரு முக்கால் பக்கத்தில் நிறைந்து விடுவது.

கோஹ்லி: சொல்லத் தேவையில்லாமல் சாம்பியன் பேட்ஸ்மேன். போராளி. நல்ல போட்டியாளன். இந்த முத்தரப்புத் தொடரில் இவர் பங்களிப்பு இன்னும் துவங்கவில்லை என்பது பெரிய ஏமாற்றம்; கொஞ்சம் பதற்றமும் கூட.

தோனி: நோ கமெண்ட்ஸ்

ரெய்னா: நம்பிக்கை நட்சத்திரம். கோஹ்லிக்கு அடுத்து இவரை நம்பலாம். 

ரோஹித்: என்னத்த சொல்ல. இருநூத்தி அறுவத்து சில்லரை ரன்களையும் அடிப்பார். டுமீல் என்று ஏமாற்றிவிட்டும் போவார். கன்ஸிஸ்டன்ஸி நாட் தேர்.

பின்னியும் அக்ஸர் படேலும் நம் ரசிகர்களுக்கே புதியவர்கள். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மண்ணில் இவர்கள் என்ன பண்ணப் போகிறார்கள் என்பதை நாமறியோம்.

நம் பவுலர்கள்: அப்படி யாரும் உங்க கிட்ட இருக்காங்களாய்யா என்று எதிரணிகள் எக்காளமாய்க் கேட்பது பிசிசிஐ காதுகளுக்கு மட்டும் எப்போதும் கேட்பதேயில்லை. ஓகே, கிண்டல் ஒருபுறம் இருக்க..... புவி சாதிக்கலாம், உமேஷ் வேகம் எடுபடலாம், இஷாந்த் தன் வலியிலிருந்து மீண்டுவிட்டால் சீனியர் என்ற முறையில் நம் அணியின் வேகப்பந்து ராஜ்ஜியத்தை (!!) வழி நடத்தலாம்.

ஆக, பவுலர்கள் எல்லாம் “லாம், லாம், லாம்” பார்க்க-லாம்.

நேற்று அலுவலகத்தில் இந்தியாவின் உலகக்கோப்பை கனவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது நண்பர் இப்படிச் சொன்னார்;

“வெள்ளிக்கெழமை (30-01-2015), இங்கிலாந்தோட கடைசி லீக் மேட்ச். அதுல வின் பண்ணிட்டா நாம ஃபைனல்ஸ் போயிடுவோம். சண்டே ஆஸ்திரேலியாவை ஜெயிக்கறோம்; கப்பை தூக்கறோம். அதுவே நமக்கு ஒரு மாரல் பூஸ்ட் இல்லையா. அப்புறம் நேரா வேர்ல்ட் கப் லீக், க்வாட்டர், செமி, ஃபைனல்ஸு, கப்பு நம்மள்துதான்”

நான் சொன்னேன், “தம்பி, கொஞ்சம் நிறுத்தறியா? இந்த ட்வீட்டைக் கொஞ்சம் படிச்சிக்கோயேன்....











You may like this as well...

Related Posts Plugin for WordPress, Blogger...