Saturday 14 March 2015

சில ஹேஷ்யங்கள்




கிட்டத்தட்ட முதல் ரவுண்டில் எல்லாம் முடிந்து விட்டன. இரண்டே இரண்டு மேட்சுகள் மட்டும் பாக்கி. ஆனால் பாருங்கள் அவை இரண்டும்தான் (வழக்கம்போல்), நாக்-அவுட் ரவுண்டில் யார் யாருடன் ஆடப் போகிறார்கள் என்று தீர்மானம் செய்யப் போகின்றன.

ஒன்று

எது எப்படி இருந்தாலும் மே.இ.தீவுகள் அணி நிகர ரன் ரேட்டில் இப்போதைய பாகிஸ்தானின் நிகர ரன் ரேட்டைத் தாண்டியாக வேண்டும். ஐக்கிய அரேபிய அணியுடனான கடைசிப் போட்டி மே.இ.தீவுகளுக்கு இன்னும் நான்கு மணிநேரங்களில் தொடங்குகிறது.

பாகிஸ்தானின் நி.ர.ரேட்டைக் கடப்பது, ஒருவேளை அயர்லாந்திடம் பாகிஸ்தான் தோற்றாலும் மே.இ.தீ அணிக்கு காலிறுதிக்குள் நுழைய உதவும்.

இரண்டு:

பாகிஸ்தான் (ஒருவேளை :) ) வென்றுவிட்டால் மேஇதீ out of risk. அயர்லாந்தைவிட அவர்கள் நி.ர.ரேட்டில் மேலே இருப்பதால் நேரடியாக உள்ளே வந்து விடுவார்கள். அயர்லாந்து வெளியே.


மூன்று:

மேஇதீ அணியின் போட்டி மழையால் நிற்கக்கூடாது. அப்படி அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விட்டால் அயர்லாந்தும் பாகிஸ்தானும் காலிறுதி உள்ளே.


நான்கு

மேலும், நாளை மேஇதீ அணி ஐக்கிய அரேபிய அணியிடம் தோற்றுப் போகுக் ஷாக்கரும் நிகழ்ந்து விடக் கூடாது.


ஐந்து

பாகிஸ்தானை அயர்லாந்து வெல்வது அத்தனை எளிதல்ல. தோல்வியில் இருக்கும் ரிஸ்க் பாகிஸ்தான் நன்கு அறிந்தது. இருந்தாலும் முன்னூறு ரன்களை இலக்காகக் கொடுத்தால் எமகாதக அயர்லாந்தினர் வென்றாலும் ஆச்சர்யம் இல்லை. அப்படி நிகழ்ந்து விட்டால் ஹேஷ்யம் ஒன்றின்படி மேஇதீ அணி உள்ளே (provided - பாகிஸ்தானை அவர்கள் நிரக ரன் ரேட்டில் தாண்ட வேண்டும்)


ஆக இத்தனையில் ஏதேனும் ரிசல்ட்டு அமைந்து உள்ளே வரும் இரண்டு அணிகளில் ஒன்று நியூசிலாந்தையும் மற்றொன்று ஆஸி அணியையும் எதிர்கொள்ளும். இதில் இன்னொரு உள்குத்து மேஇதீ அணியும், பாகிஸ்தானும் தெஆ அணியின் நிரரேட்டைத் தாண்டிவிடக் கூடாது. தாண்டினால் ஃபிக்ச்சர்கள் (இரண்டு வல்லினங்கள் பக்கப்பக்கம் இப்படி வரல்லாமா?) கன்னாபின்னாவென மாறகூடும் (ஓகே, இங்கே ஒற்றெழுத்தை எடுத்து பேலன்ஸ் செய்துவிடலாம் ;) ).

என் அனுமானத்தின் படி ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் காலிறுதியில் மோதும். அந்தப் போட்டியில் வெல்லும் அணி, இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ளும் (இந்தியா பங்களாதேஷ் அணியை காலிறுதியில் வெல்லும் எனும் நம்பிக்கையில்).

சென்றமுறை நாம்தான் அந்த இருவருக்கும் எக்ஸிட் கேட்டுக்கான வழியை கால்-அரை இறுதிகளில் காட்டினோம் என்பதால் இந்த முறை அரையிறுதி மிகவும் கடினமாக இருக்கும்.

பார்ப்போம்.....



You may like this as well...

Related Posts Plugin for WordPress, Blogger...