Saturday 14 March 2015

சில ஹேஷ்யங்கள்




கிட்டத்தட்ட முதல் ரவுண்டில் எல்லாம் முடிந்து விட்டன. இரண்டே இரண்டு மேட்சுகள் மட்டும் பாக்கி. ஆனால் பாருங்கள் அவை இரண்டும்தான் (வழக்கம்போல்), நாக்-அவுட் ரவுண்டில் யார் யாருடன் ஆடப் போகிறார்கள் என்று தீர்மானம் செய்யப் போகின்றன.

ஒன்று

எது எப்படி இருந்தாலும் மே.இ.தீவுகள் அணி நிகர ரன் ரேட்டில் இப்போதைய பாகிஸ்தானின் நிகர ரன் ரேட்டைத் தாண்டியாக வேண்டும். ஐக்கிய அரேபிய அணியுடனான கடைசிப் போட்டி மே.இ.தீவுகளுக்கு இன்னும் நான்கு மணிநேரங்களில் தொடங்குகிறது.

பாகிஸ்தானின் நி.ர.ரேட்டைக் கடப்பது, ஒருவேளை அயர்லாந்திடம் பாகிஸ்தான் தோற்றாலும் மே.இ.தீ அணிக்கு காலிறுதிக்குள் நுழைய உதவும்.

இரண்டு:

பாகிஸ்தான் (ஒருவேளை :) ) வென்றுவிட்டால் மேஇதீ out of risk. அயர்லாந்தைவிட அவர்கள் நி.ர.ரேட்டில் மேலே இருப்பதால் நேரடியாக உள்ளே வந்து விடுவார்கள். அயர்லாந்து வெளியே.


மூன்று:

மேஇதீ அணியின் போட்டி மழையால் நிற்கக்கூடாது. அப்படி அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விட்டால் அயர்லாந்தும் பாகிஸ்தானும் காலிறுதி உள்ளே.


நான்கு

மேலும், நாளை மேஇதீ அணி ஐக்கிய அரேபிய அணியிடம் தோற்றுப் போகுக் ஷாக்கரும் நிகழ்ந்து விடக் கூடாது.


ஐந்து

பாகிஸ்தானை அயர்லாந்து வெல்வது அத்தனை எளிதல்ல. தோல்வியில் இருக்கும் ரிஸ்க் பாகிஸ்தான் நன்கு அறிந்தது. இருந்தாலும் முன்னூறு ரன்களை இலக்காகக் கொடுத்தால் எமகாதக அயர்லாந்தினர் வென்றாலும் ஆச்சர்யம் இல்லை. அப்படி நிகழ்ந்து விட்டால் ஹேஷ்யம் ஒன்றின்படி மேஇதீ அணி உள்ளே (provided - பாகிஸ்தானை அவர்கள் நிரக ரன் ரேட்டில் தாண்ட வேண்டும்)


ஆக இத்தனையில் ஏதேனும் ரிசல்ட்டு அமைந்து உள்ளே வரும் இரண்டு அணிகளில் ஒன்று நியூசிலாந்தையும் மற்றொன்று ஆஸி அணியையும் எதிர்கொள்ளும். இதில் இன்னொரு உள்குத்து மேஇதீ அணியும், பாகிஸ்தானும் தெஆ அணியின் நிரரேட்டைத் தாண்டிவிடக் கூடாது. தாண்டினால் ஃபிக்ச்சர்கள் (இரண்டு வல்லினங்கள் பக்கப்பக்கம் இப்படி வரல்லாமா?) கன்னாபின்னாவென மாறகூடும் (ஓகே, இங்கே ஒற்றெழுத்தை எடுத்து பேலன்ஸ் செய்துவிடலாம் ;) ).

என் அனுமானத்தின் படி ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் காலிறுதியில் மோதும். அந்தப் போட்டியில் வெல்லும் அணி, இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ளும் (இந்தியா பங்களாதேஷ் அணியை காலிறுதியில் வெல்லும் எனும் நம்பிக்கையில்).

சென்றமுறை நாம்தான் அந்த இருவருக்கும் எக்ஸிட் கேட்டுக்கான வழியை கால்-அரை இறுதிகளில் காட்டினோம் என்பதால் இந்த முறை அரையிறுதி மிகவும் கடினமாக இருக்கும்.

பார்ப்போம்.....



Saturday 28 February 2015

விறுவிறு சுறுசுறு

இன்றைய உலகக்கோப்பை லீக் போட்டி நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு போட்டி.

ஆஸ்திரேலிய - நியூசிலாந்து அணிகள் மோதின. நமக்கு பாகிஸ்தான் என்கிற அளவுக்கு இல்லை என்றாலும் கூட, ஆஸ்திரேலிய அணிக்கு செம்ம rival நியூசிலாந்துதான். 

1992 உலகக்கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் இதே ஆக்லாந்தில் மோதின. அன்றைக்கு ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த அதே ரிசல்ட் இன்றும். ஒரே வித்தியாசம் - அன்று முதலில் பேட் செய்தது நியூசி. இன்று முதலில் பேட் செய்தது ஆஸி அணி. 

1992 உலகக்கோப்பையில் முதல் ஏழு போட்டிகளிலும் வெல்ல முடியாத அணியாக வலம் வந்தது நியூசிலாந்து. வரலாறு அதே போல் இன்றும் தொடர்கிறது. இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் எதிலும் தோற்காமல் நின்று கொண்டிருக்கிறது நியூசி அணி.

இன்றைய போட்டியில் எண்பது ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று முதலில் ஆடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி திடீரென்று தொண்ணூறுகளின் இந்திய அணியைப் போல டமால் டுமீல் என்று விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

ஒரு டீ குடித்து விட்டுத் திரும்பும் நேரத்திற்குள் நூற்று ஆறு ரன்களுக்கு ஒன்பது விக்கெட் என்று இளித்தது ஸ்கோர்போர்டு. பின்னர் தட்டுத் தடுமாறி 151 ரன்களை எட்டியது ஸ்கோர்போர்டு.

கிரிக்கெட் ஈஸ் எ க்ரேஸி கேம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நியூசி அணியும் பேட்டிங்கில் ஆஸி அணிக்கு சளைத்தவரில்லை எனும் வண்ணம் சொதப்போ சொதப்பு என்று சொதப்ப - எப்படியோ ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இறுதியில் ஜெயித்தது நியூசி.

ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் நியூசி தரப்பில் வெற்றிக்கு வித்திட்ட போல்ட் - தான் எடுத்த ஐந்து விக்கெட்டுகளுக்காக - இன்று ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் அவார்டை பெற்றுக் கொண்டார். 

இதுவரை இருபது மேட்சுகள் நிறைந்திருக்கின்றன. இங்கே இந்தியாவும், அங்கே நியூசியும் டேபிள் டாப்பர் அணிகள்.

மயிரிழையில் தென்னாப்பிரிக்காவிடமும், கடைசி பன்னிரண்டு ஓவர் சொதப்பலில் மேற்கிந்தியத் தீவிடமும் தோற்ற ஜிம்பாப்வே அணி நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது. என் உள்ளுணர்வு என்னவோ இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே ஜெயிக்கும் என்று சொல்கிறது.

மற்றொரு போட்டியில் டாப் 4’க்குள் தலையை நுழைக்க வேண்டும் என்பதால் வென்று தீரும் கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி இலங்கையுடன் மோதுகிறது.

பார்ப்போம்!

இன்றைய ஆஸி-நியூசி போட்டியின் மற்றொரு விசேஷம் - இந்த இரண்டு அணிகளும் ரொம்ப நாளாக மறந்து விட்டிருந்த சாப்பல் - ஹாட்லி கோப்பைக்கான போட்டியாகவும் இந்த போட்டியை இரண்டு அணிகளும் அங்கீகரித்துக் கொண்டது. 2009 - 10’ல் இந்தக் கோப்பையைக் கைப்பற்றியிருந்த ஆஸி அணியிடமிருந்து கோப்பையை இன்று நியூசி அணி பிடுங்கிக் கொண்டது. 




Monday 23 February 2015

நிஓவி என்னும் நெட் ரன் ரேட்

இந்த நெட் ரன் ரேட், நெட் ரன் ரேட் என்கிறார்களே, அதனை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கூகுளாரைக் குடைந்தேன். கூகுளார் என்னை விக்கி பக்கத்திற்கு அனுப்பினார். 


அங்கே சும்மாயிராமல் இடது மூலையில், தமிழ்”, என்று இருந்த இணைப்பைத் தட்டியதும் கீழே இருக்கும் இந்தத் தகவல்களை விக்கி துப்பியது.

அடங்கோ! ஒரு விஷயம் புரியலைன்னு இங்க வந்தா இங்க அதைவிடப் புரியாத விஷயங்களாப் போட்டுக் கொல்றாய்ங்களே என்று ஓடி வந்துவிட்டேன்.


நிகர ஓட்ட விகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகர ஓட்ட விகிதம் (Net Run Rate) அல்லது சுருக்கமாக நி.ஓ.வி (NRR) என்பது துடுப்பாட்டத்தில் அணிகளின் செயல்திறனை அல்லது ஆட்டத்தை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு புள்ளியியல் முறைமையாகும். மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்ற துடுப்பாட்டப் போட்டிகளில் அணிகளை தரவரிசைப்படுத்த மிகவும் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு தனி ஆட்டத்தில் நிகர ஒட்ட விகிதமானது ஒரு பந்துப் பரிமாற்றத்திற்கு அவ்வணி எடுக்கும் ஓட்டவிகிதத்திலிருந்து எதிரணி எடுக்கும் ஒரு பந்துப் பரிமாற்றத்திற்கு எடுக்கும் ஓட்ட விகிதத்தை கழித்துப் பெறுவதாகும்.

விரிவான விளக்கம்[தொகு]

ஓர் அணியின் ஓட்ட விகிதம் என்பது அவ்வணி எடுத்த ஓட்டங்களை அவ்வணி எதிர்கொண்ட பந்துப் பரிமாற்றங்களால் வகுத்துப் பெறுவதாகும். ஓர் பந்துப் பரிமாற்றத்திற்கு ஆறு பந்துகள் இருப்பதால் இவ்வாறு கணக்கிட ஒவ்வொரு பந்தும் 1/6 பந்துப் பரிமாற்றமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வழமையான துடுப்பாட்டத்தில் இது .1 ஓவராக கொள்ளப்படுகிறது.
ஓர் அணியானது 50 பந்துப் பரிமாற்றங்களில் 250 ஓட்டங்கள் எடுத்ததாயின் அதன் ஓட்ட விகிதம் \frac{250}{50} = 5 ஆகும். இதே ஓட்ட எண்ணிக்கையை அவ்வணி 47.5 பந்துப் பரிமாற்றங்களில் எடுத்திருந்தால், அவர்களது ஓட்ட விகிதம் \frac{250}{47\frac{5}{6}} \approx 5.226 ஆக இருக்கும்.
நிகர ஓட்ட விகிதத்தின் கருதுகோளானது எதிரணியின் இறுதி ஓட்ட விகிதத்தை அவ்வணியின் ஓட்ட விகிதத்திலிருந்து நீக்கிப் பெறுவதை மையப்படுத்தி உள்ளது. இதில் உள்ள ஒரு சிக்கல் ஏதேனும் அணி மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்றங்களை முழுமையாக ஆடாது அனைத்து இலக்குகளையும் இழக்கும்போது அவர்கள் எதிர்கொண்ட பந்துகளைக் கொண்டு வகுக்காமல் முழுமையான பந்துப் பரிமாற்றங்களால் வகுக்கப் படுகிறது. அதாவது ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 50 பந்துப் பரிமாற்றங்களிலாலும் இருபது20 போட்டிகளில் 20 பந்துப் பரிமாற்றங்களினாலும் வகுக்கப்படுகிறது.
வழமையாக, ஓரு பருவத்தில் அணிகள் பெற்ற ஓட்டங்களும் பந்துப் பரிமாற்றங்களும் கீழ்கண்டவாறு தொகுக்கப்பட்டு போட்டி பட்டியலில் அணிகள் ஒப்பிடப்படுகின்றன. \mbox{net run rate }=\frac{\mbox{total runs scored}}{\mbox{total overs faced}}-\frac{\mbox{total runs conceded }}{\mbox{total overs bowled}}

Sunday 22 February 2015

இதுவரை 2015 போட்டிகள்



மக்களே! மக்களுக்கு மக்களே!

இதுவரை நடந்து  முடிந்த மேட்சுகளைப் பார்த்து ரசித்து ஒரு திருப்திகரமான உலகக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை துவங்கி இருக்கிறது என்று நம்பும் உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

சின்ன அணிகள் பெரிய அணிகளைப் புரட்டிப் போடும் உலகக்கோப்பைகளின் சம்பிரதாய அதிர்ச்சிகரங்கள் இந்த முறையும் போட்டிகள் ஆரம்பித்த துவக்கத்திலேயே துவங்கி விட்டன. சென்றமுறை இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தந்த அயர்லாந்து அணி இந்த முறை விண்டீஸ் அணிக்கு அதே அதிர்ச்சியைத் தந்தது. சென்ற முறை நடத்திய அதே ஸ்டைலில்  300+ ரன்களை இந்த முறையும் அடித்துக் கடந்தது அயர்லாந்து.

அது தவிர்த்துப் பார்த்தால், தன் முதல் வெற்றிக்கு இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முக்கியச் செய்திகளில் அடிபடுகின்றன. சவுத்தி எடுத்த ஏழு விக்கெட்டுகளும் (இங்கிலாந்திடம்), அதே ஆட்டத்தில் மெக்கல்லம் எடுத்த அதிரடி அரைசதமும் ரொம்ப நாட்களுக்கு நினைவில் இருக்கும்.

இந்திய பாகிஸ்தான், இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளின் மேட்சுகள் பற்றி ரசிகமகா ஜனங்களுக்கு நாம் ஏதும் சொல்லத் தேவையில்லை. ஷிகார் தவானை என் முந்தைய பதிவில் திட்டியிருந்தேன்; அதனை மாத்திரம் இப்போதைக்கு வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

ஜிம்பாப்வே அணியை ஒதுக்கி ஓரங்கட்டலாம் என்றால் - முதல் சுற்றில் வெஸ்டிண்டீஸ் அணி மட்டுமே இன்னமும் இந்தியா சந்திக்கவிருக்கும் பெரிய அணி.  முதல் இரு மாட்சுகள் போல இந்த மாட்சும் நல்லபடியா அமையணும் மாரியாத்தா. தவிர, ஐக்கிய அரேபிய, அயர்லாந்து அணிகளுடனான மேட்சுகள் இந்தியாவின் டேபிள் டாப்பர் கனவுக்குத் துணை புரியும் என்று நம்பலாம்.

இன்று மயிரிழையில் இலங்கை அணி ஆப்கான் அணியிடம் தப்பியதைத் தவிர்த்து க்ரூப் ஏவில் அந்தப்பக்கம் அதிர்ச்சிகள் ஏதுமில்லை. 

காலிறுதியில் இந்தியா இங்கிலாந்துடனா அல்லது பங்களாதேஷுடன் ஆடப்போகிறதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பார்க்கலாம்!

Sunday 8 February 2015

The Damage that Dhoni has caused

Thanks: ABPlive

Times of India's article dated today (8th Feb 2015) narrates a story from Dhonis Kharagpur life as follows:

"An angry Dhoni getting into a fight with his roommate Deepak while trying to decide which TV channel to watch. 

The fight it said became so intense that it caused damage to the television and another roommate and friend Satyaprakash Krishna, who was responsible for him getting the job, had to intervene. 

While Dhoni insisted on watching a Sharjah Cup match, Deepak was busy watching Amitabh Bachchan in 'Muqaddar Ka Sikandar'."
 From ticket collector Dhoni to World Cup-winning captain

 And of course this post by me or the title of this post has/have no connection with the damage that the lad has made to the Team India :)

Wednesday 28 January 2015

வடக்குப்பட்டி ராமசாமிட்டருந்து பணம் வந்துரும்




மேலே கொடுத்திருக்கும் என் ட்வீட் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியின் போது நான் போட்டது.   நிஜமாகவே இந்திய அணியின் நிலைமை அந்தக் கடனைக் கேட்கப் போகும் கவுண்டமணியின் நிலைக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு இந்தியனின் கனவும் இந்தியா இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுவே!

இங்கே கீழே இருக்கும் கருத்து நண்பர் சேதுராமன் சொல்வது.



ஸ்மித்தும், டிவில்லர்ஸும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நியூசி அணியும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பாகிஸ்தான் அணியின் சமீபத்தைய எழுச்சி யோசிக்க வைக்கிறது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் களமிறங்குகிறது. இங்கிலாந்து இந்த முத்தரப்புத் தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும்  நன்றாகவே ஆடியுள்ளது; ஆஸ்திரேலியாவுடன் தோற்றுப்போன இரண்டு போட்டிகளையும் சேர்த்தே நான் சொல்கிறேன். மே.இந்திய அணியை உதாசீனப்படுத்துவதற்கில்லை. இலங்கை அணி கடந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் ஃபேவரிட் அணியாக ஊகிக்கப்படாத அணியாக இருந்தும் இறுதிவரை வந்த அணி, ஆக, மிச்சம் இருப்பது ஜிம்பாப்வேயும் இதர உதிரி அணிகளும் மட்டுமே.

மேலே நான் குறிப்பிட்ட ஏழு அணிகளையும் கடந்துதான் இந்தியா கோப்பையை இந்தியாவிற்குக் கொண்டு வர முடியும்.

இங்கே இந்தியாவின் பலத்தைப் பார்ப்போம்.

இந்தியா ஒருநாள் போட்டிகளில் ஜித்து அணிதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உள்ளூரில் ஆஸ்திரேலியாவை உதைத்தது முதல் வெளியூரில் இங்கிலாந்தை துவைத்தது வரை சென்ற ஆண்டின் வெற்றிப் பட்டியல்களில் நிறைய சொல்லலாம். இங்கே கோஹ்லி தலைமையில் மே.இந்திய தீவுகளையும், இலங்கையையும் புரட்டி எடுத்ததையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், எப்போதும் current form of the team என்பதுதான் கருத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நம் அணி டெண்ட் அடித்துத் தங்கியுள்ளது. ஆம், தங்கி மட்டுமே உள்ளதாகத்தான் நம் ரசிகர்களுக்குத் தெரிகிறது. இன்னமும் ஒரு வெற்றி எண்ணிக்கையையும் நான் அங்கே துவக்கவில்லை. டெஸ்ட் மேட்ச் - இரண்டு தோல்வி, இரண்டு ட்ரா. ஒருநாள்: இதுவரை ஆடினதில் இரண்டு தோல்வி, ஒன்றில் ரிசல்ட் இல்லை. இதுவே நிலைமை. 

ஷிகார் தவான்: பதினைந்தில் ஒன்றான இவருக்கு உலகக் கோப்பை போட்டிகளில் பதினொன்றில் ஒருவராக உள்ளே நுழைய வாய்ப்பு தரப்பட்டால் அது அவருக்கே அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஜிங்க்ஸ்: இவர் ட்ராக் ரெகார்டை வைத்துப் பார்த்தால் ஒரு மிதமான நம்பிக்கை தருகிறார். ஆனால் ட்ராக் ரெகார்ட் ரொம்ப நீளமானது அல்ல. ஒரு முக்கால் பக்கத்தில் நிறைந்து விடுவது.

கோஹ்லி: சொல்லத் தேவையில்லாமல் சாம்பியன் பேட்ஸ்மேன். போராளி. நல்ல போட்டியாளன். இந்த முத்தரப்புத் தொடரில் இவர் பங்களிப்பு இன்னும் துவங்கவில்லை என்பது பெரிய ஏமாற்றம்; கொஞ்சம் பதற்றமும் கூட.

தோனி: நோ கமெண்ட்ஸ்

ரெய்னா: நம்பிக்கை நட்சத்திரம். கோஹ்லிக்கு அடுத்து இவரை நம்பலாம். 

ரோஹித்: என்னத்த சொல்ல. இருநூத்தி அறுவத்து சில்லரை ரன்களையும் அடிப்பார். டுமீல் என்று ஏமாற்றிவிட்டும் போவார். கன்ஸிஸ்டன்ஸி நாட் தேர்.

பின்னியும் அக்ஸர் படேலும் நம் ரசிகர்களுக்கே புதியவர்கள். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மண்ணில் இவர்கள் என்ன பண்ணப் போகிறார்கள் என்பதை நாமறியோம்.

நம் பவுலர்கள்: அப்படி யாரும் உங்க கிட்ட இருக்காங்களாய்யா என்று எதிரணிகள் எக்காளமாய்க் கேட்பது பிசிசிஐ காதுகளுக்கு மட்டும் எப்போதும் கேட்பதேயில்லை. ஓகே, கிண்டல் ஒருபுறம் இருக்க..... புவி சாதிக்கலாம், உமேஷ் வேகம் எடுபடலாம், இஷாந்த் தன் வலியிலிருந்து மீண்டுவிட்டால் சீனியர் என்ற முறையில் நம் அணியின் வேகப்பந்து ராஜ்ஜியத்தை (!!) வழி நடத்தலாம்.

ஆக, பவுலர்கள் எல்லாம் “லாம், லாம், லாம்” பார்க்க-லாம்.

நேற்று அலுவலகத்தில் இந்தியாவின் உலகக்கோப்பை கனவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது நண்பர் இப்படிச் சொன்னார்;

“வெள்ளிக்கெழமை (30-01-2015), இங்கிலாந்தோட கடைசி லீக் மேட்ச். அதுல வின் பண்ணிட்டா நாம ஃபைனல்ஸ் போயிடுவோம். சண்டே ஆஸ்திரேலியாவை ஜெயிக்கறோம்; கப்பை தூக்கறோம். அதுவே நமக்கு ஒரு மாரல் பூஸ்ட் இல்லையா. அப்புறம் நேரா வேர்ல்ட் கப் லீக், க்வாட்டர், செமி, ஃபைனல்ஸு, கப்பு நம்மள்துதான்”

நான் சொன்னேன், “தம்பி, கொஞ்சம் நிறுத்தறியா? இந்த ட்வீட்டைக் கொஞ்சம் படிச்சிக்கோயேன்....











You may like this as well...

Related Posts Plugin for WordPress, Blogger...