Sunday 22 February 2015

இதுவரை 2015 போட்டிகள்



மக்களே! மக்களுக்கு மக்களே!

இதுவரை நடந்து  முடிந்த மேட்சுகளைப் பார்த்து ரசித்து ஒரு திருப்திகரமான உலகக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை துவங்கி இருக்கிறது என்று நம்பும் உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

சின்ன அணிகள் பெரிய அணிகளைப் புரட்டிப் போடும் உலகக்கோப்பைகளின் சம்பிரதாய அதிர்ச்சிகரங்கள் இந்த முறையும் போட்டிகள் ஆரம்பித்த துவக்கத்திலேயே துவங்கி விட்டன. சென்றமுறை இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தந்த அயர்லாந்து அணி இந்த முறை விண்டீஸ் அணிக்கு அதே அதிர்ச்சியைத் தந்தது. சென்ற முறை நடத்திய அதே ஸ்டைலில்  300+ ரன்களை இந்த முறையும் அடித்துக் கடந்தது அயர்லாந்து.

அது தவிர்த்துப் பார்த்தால், தன் முதல் வெற்றிக்கு இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முக்கியச் செய்திகளில் அடிபடுகின்றன. சவுத்தி எடுத்த ஏழு விக்கெட்டுகளும் (இங்கிலாந்திடம்), அதே ஆட்டத்தில் மெக்கல்லம் எடுத்த அதிரடி அரைசதமும் ரொம்ப நாட்களுக்கு நினைவில் இருக்கும்.

இந்திய பாகிஸ்தான், இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளின் மேட்சுகள் பற்றி ரசிகமகா ஜனங்களுக்கு நாம் ஏதும் சொல்லத் தேவையில்லை. ஷிகார் தவானை என் முந்தைய பதிவில் திட்டியிருந்தேன்; அதனை மாத்திரம் இப்போதைக்கு வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

ஜிம்பாப்வே அணியை ஒதுக்கி ஓரங்கட்டலாம் என்றால் - முதல் சுற்றில் வெஸ்டிண்டீஸ் அணி மட்டுமே இன்னமும் இந்தியா சந்திக்கவிருக்கும் பெரிய அணி.  முதல் இரு மாட்சுகள் போல இந்த மாட்சும் நல்லபடியா அமையணும் மாரியாத்தா. தவிர, ஐக்கிய அரேபிய, அயர்லாந்து அணிகளுடனான மேட்சுகள் இந்தியாவின் டேபிள் டாப்பர் கனவுக்குத் துணை புரியும் என்று நம்பலாம்.

இன்று மயிரிழையில் இலங்கை அணி ஆப்கான் அணியிடம் தப்பியதைத் தவிர்த்து க்ரூப் ஏவில் அந்தப்பக்கம் அதிர்ச்சிகள் ஏதுமில்லை. 

காலிறுதியில் இந்தியா இங்கிலாந்துடனா அல்லது பங்களாதேஷுடன் ஆடப்போகிறதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பார்க்கலாம்!

No comments:

Post a Comment

You may like this as well...

Related Posts Plugin for WordPress, Blogger...