Saturday 28 February 2015

விறுவிறு சுறுசுறு

இன்றைய உலகக்கோப்பை லீக் போட்டி நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு போட்டி.

ஆஸ்திரேலிய - நியூசிலாந்து அணிகள் மோதின. நமக்கு பாகிஸ்தான் என்கிற அளவுக்கு இல்லை என்றாலும் கூட, ஆஸ்திரேலிய அணிக்கு செம்ம rival நியூசிலாந்துதான். 

1992 உலகக்கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் இதே ஆக்லாந்தில் மோதின. அன்றைக்கு ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த அதே ரிசல்ட் இன்றும். ஒரே வித்தியாசம் - அன்று முதலில் பேட் செய்தது நியூசி. இன்று முதலில் பேட் செய்தது ஆஸி அணி. 

1992 உலகக்கோப்பையில் முதல் ஏழு போட்டிகளிலும் வெல்ல முடியாத அணியாக வலம் வந்தது நியூசிலாந்து. வரலாறு அதே போல் இன்றும் தொடர்கிறது. இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் எதிலும் தோற்காமல் நின்று கொண்டிருக்கிறது நியூசி அணி.

இன்றைய போட்டியில் எண்பது ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று முதலில் ஆடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி திடீரென்று தொண்ணூறுகளின் இந்திய அணியைப் போல டமால் டுமீல் என்று விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

ஒரு டீ குடித்து விட்டுத் திரும்பும் நேரத்திற்குள் நூற்று ஆறு ரன்களுக்கு ஒன்பது விக்கெட் என்று இளித்தது ஸ்கோர்போர்டு. பின்னர் தட்டுத் தடுமாறி 151 ரன்களை எட்டியது ஸ்கோர்போர்டு.

கிரிக்கெட் ஈஸ் எ க்ரேஸி கேம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நியூசி அணியும் பேட்டிங்கில் ஆஸி அணிக்கு சளைத்தவரில்லை எனும் வண்ணம் சொதப்போ சொதப்பு என்று சொதப்ப - எப்படியோ ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இறுதியில் ஜெயித்தது நியூசி.

ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் நியூசி தரப்பில் வெற்றிக்கு வித்திட்ட போல்ட் - தான் எடுத்த ஐந்து விக்கெட்டுகளுக்காக - இன்று ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் அவார்டை பெற்றுக் கொண்டார். 

இதுவரை இருபது மேட்சுகள் நிறைந்திருக்கின்றன. இங்கே இந்தியாவும், அங்கே நியூசியும் டேபிள் டாப்பர் அணிகள்.

மயிரிழையில் தென்னாப்பிரிக்காவிடமும், கடைசி பன்னிரண்டு ஓவர் சொதப்பலில் மேற்கிந்தியத் தீவிடமும் தோற்ற ஜிம்பாப்வே அணி நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது. என் உள்ளுணர்வு என்னவோ இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே ஜெயிக்கும் என்று சொல்கிறது.

மற்றொரு போட்டியில் டாப் 4’க்குள் தலையை நுழைக்க வேண்டும் என்பதால் வென்று தீரும் கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி இலங்கையுடன் மோதுகிறது.

பார்ப்போம்!

இன்றைய ஆஸி-நியூசி போட்டியின் மற்றொரு விசேஷம் - இந்த இரண்டு அணிகளும் ரொம்ப நாளாக மறந்து விட்டிருந்த சாப்பல் - ஹாட்லி கோப்பைக்கான போட்டியாகவும் இந்த போட்டியை இரண்டு அணிகளும் அங்கீகரித்துக் கொண்டது. 2009 - 10’ல் இந்தக் கோப்பையைக் கைப்பற்றியிருந்த ஆஸி அணியிடமிருந்து கோப்பையை இன்று நியூசி அணி பிடுங்கிக் கொண்டது. 




No comments:

Post a Comment

You may like this as well...

Related Posts Plugin for WordPress, Blogger...